Monday, July 28, 2014

இனி இஸ்லாம் வெல்லும்



ஈதுல் பித்ர் பெருநாள்


ஈதுல் பித்ர் பெருநாள், ரமலானின் ஒரு மாத பட்டினி வணக்கம் நிறைவடைவதை ஒட்டி வருவதால் அதை உண்டு மகிழ்ந்து கொண்டாடும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு சொல்கிறது.

பக்ரீத் எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகு சாப்பிடாமல் கிளம்புவதும் ஈதுதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பிறகு கிளம்புவதும் இஸ்லாமிய கலாச்சாரமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடாமல் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள் என பெருமானாரின் பணியாளர் அன்ஸ் (ரலி) கூறுகிறார்.  அதிலும் குறிப்பாக பேரீத்தம் பழத்தை ஒற்றை எண்ணிக்கையில் சாப்பிடுவது பெருமானரின் பழக்கம் என அவர் மேலும் தெரிவிக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 952)

எங்களது ஊரின் சில பள்ளிவாசல்களில் ரமலானுக்கு கஞ்சி காய்ச்சுவது போலவே  பெருநாள் அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வரும் மக்களுக்கு பேரீத்தம் பழங்களை தட்டில் வைத்து நீட்டுகிற பழக்கம் இருக்கிறது. நபிகள் பெருமானாரின் ஒரு வழி முறையை கடைபிடிப்பதோடு  அற்புதமான பெருநாள் வாழ்த்தாகவும் அது அமைந்து விடுகிறது.  

தாம் உண்டு மகிழ்ந்த்தின் அடுத்த தொடர் நடவடிக்கையாக பிறருக்கு கொடுத்து மகிழும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெருநாள் அன்று அன்றைய செலவுக்கு போக அதிகமாக காசு வைத்திருப்பவர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தலைகட்டு தர்ம்மாக பித்ரா எனும் தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுத்துவிட வேண்டும்.

ஒவ்வொரு தலைக்கும் 1.700 கிராம் கோதுமை அல்லது 2.400 கிராம் நடுத்தர அரிசி வீதம் பித்ரா தர்ம்ம் வழங்கப்ப்ட வேண்டும். உண்வுப் பொருளாக வழக முடியாதவர்கள் பணமாக வழங்குவ்தெனில் குறைந்த பட்சம் தலைக்கு ரூபாய 60 என்று கண்க்கிட்டு வழங்க வேண்டும்.

இது குறைந்த பட்ச அளவு தான். விரிந்த உள்ளம் கொண்ட தயாபரர்கள் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி என்ற அளவில் கூட பித்ரா தர்ம்ம் வழங்கலாம். லட்சாதிபதிகளும் கோடீஸ்வர்ர்களும் அளந்து பார்த்து வழங்க வேண்டியதில்லை. அரிசி வழங்குபவர்கள் கூட வசதி இருந்தால் பிரியாணி அரிசி வழங்குவது ஏழை எளியவர்களின் பெருநாள் செலவின் சுமையை குறைக்கும். அதுமட்டுமல்ல செல்வந்தர்களின் கௌரவத்திற்கு அது அழகு சேர்க்கும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையாகும்.    

பெருநாள் தொழுக்கைக்கு முன்னதாகவே பித்ரா தர்மத்தை வழங்கி விட  வேண்டும் என்பது இஸ்லாமின் உறுதியான அறிவுரையாகும். தொழுக்கைக்குப் பின்னால் வழங்கப்படும் தர்ம்ம்  சாதாரண தர்ம்மாகவே கணிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (இப்னுமாஜா 1817) என்வே பெருநாள் தொழுகைக்குப் பின்னால் தொழ்கைத்திடல்களின் வாசலில் காத்திருக்கிற யாசகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சில்லரை காசுகளாக பித்ரா தர்மத்தை மாற்றி விடக்கூடாது என்பதை சமுதாரப் பிரமுகர்கள் கவனிக்க வேண்டும்.  

ஈதுல் பித்ர் பெருநாள் அன்று, அந்த மகிழ்ச்சியை வழங்கிய இறைவனை வணங்குவதற்கு முன்னதாக ஏழைகளை மகிழ்ச்சிப் படுத்திவிட வேண்டும் என்ற இஸ்லாமின் இந்தக் கோட்பாடு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மனப்பக்குவத்தை சமுதாயத்திற்கு வழங்குகிறது.

இந்த தர்மத்தை முதலில் தம் உறவினர்களிடமிருந்து தொடங்குவதே உண்மையான இஸ்லாமிய அக்கறையாகும். உறவினர்களுக்கு அடுத்தபடியாக தமது பகுதியில் இருக்கிற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவைப் பெருத்தவரை அது கடினமான வேலையல்ல. வீட்டு வாசலை விட்டு கீழே இறங்கினால் தகுதியுள்ள பலர் தாராளமாக கிடைப்பார்கள். அவர்களை தேடிச் சென்று சென்று தர்ம்ம் வழங்குகையில் ஒரு ஆனந்தம் கிட்டும். அந்த ஆனந்தம் தர்ம்ம் செய்த நிறைவை விட பேரானந்தமாக அமையும்.

சென்ற வருடம் இரத்தப்புற்று நோயாளல் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனைத்தேடி தன்னுடைய தர்மத்தை வழங்குவதற்காக ஒருவர் என்னோடு காரில் வந்தார். சுமார் 40 கீலோ மீட்டர் சுற்றி அலைந்த பிறகு அந்த இளைஞன் வீட்டை கண்டுபிடித்தோம். அவர்க் கொடுத்த பணம் 5000 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அதற்காக தகுதியுள்ளவரை தேடிச் சென்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் அந்த சகோதர்ருக்கு 5000 ரூபாயை விட அதிகமாக இருந்த்து. ஒன்றுக்கு எழுநூறு மடங்கு அதிகம் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அது எப்படி இருக்கும் என்பதன் அட்வான்ஸாக இந்த மகிழ்ச்சி அவருக்கு அமைந்த்து. 

ரகசியமாக தர்ம்ம் செய்வதிலும், அதுபோல தகுதியுள்ளவர்களை - யாரிடமும் கேட்கத் தயங்க்கிக் கொண்டிருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தர்ம்ம் செய்வதிலும் கிடைக்கிற பேராணந்த்தமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் சிலருக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.

எதிலும் காசுபார்த்து பழகிவிட்ட அமைப்புக்களிடமும் இயக்கங்களிடமும் பித்ரா தர்மத்தை வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்குள் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கே வழி செய்கிருக்கிறது ஈந்துவத்தலின் இன்பத்தை அனுபவிக்க்விடாத இயக்கப் பற்றாக அது மாறிவிட்ட்து என்பதும் இங்கே கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.


ஈதுல் பித்ர் பெருநாளின் இன்னொரு சிறப்பு.  அது கடந்த கால நினைவை போற்றுவதாகவோ, ஏதாவது ஒரு தலைவர் அல்லது வரலாற்றுப் பாத்திரத்தின் ஞாபகார்த்தமகவோ அமைந்த்து அல்ல. அது முஸ்லிம்களது நிகழ்கால வாழ்வின் பக்தியையும் சந்தோஷத்தையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இனி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாகவும் திகழ்கிறது.

.

இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது பெருநாள் கொண்டாட்டங்கள் என்பது இறைவனை வணங்கி இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வ்தேயாகும். குடித்து கூத்தாடி கும்மாளம் அடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல. கொண்டாட்டம் என்ற வார்த்தையே கூட இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேச பொருத்தமற்றதாகும். வழக்குச் சொல் என்பதற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை என்பதற்காகவுமே அச்சொல் இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேசப்படுகிறது.   என்வே இஸ்லாமிய பெருநாட்கள் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை தருவதாக இருப்பதில்லை,


இன்று இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் மிக்ச் சவலான் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தந்திரம் மிக்க எதிரிகள், கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமிருக்கிற எல்லாவகையான நவீன ஆயுதங்களையும் ஊடகங்களையும் பய்ன்படுத்தி இந்த பூமிப்பந்தின் மேற்பரப்பின் பெரும் பகுதியை பன்னூறு ஆண்டுகள் கோலாச்சிய சமூகத்தை, உலகத்திற்கு சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் முன்னேற்றத்தையும் அறிமுகப் படுத்திய சமூகத்தை ஒரு குற்றவாளிச் சமூகமாக, பிற்போக்கான சமூகமாக சித்தரித்து, ஆதிவாசிப் பழங்குடிகளை அழித்த்து போல் அழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனிலும் அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிய மண்ணிலும் வேட்டையாடப் படுகிற மக்களைப் பற்றிய காட்சிகள் இந்த வேட்டைக்கார்ர்களின் இரத்த வெறிக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்தப் படு கோரமான சூழ்நிலையை வென்றெடுக்கிற சக்தி முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்கலாம். ஆனல் இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல இதைவிடக் கடுமையான பகையாளிகளையும் வாகை சூடுகிற சக்தி இஸ்லாத்திற்கு இருக்கிறது.

இஸ்லாமின் வெற்றிப் பாதை பெரும் பாலும் மலர் படுக்கையாகத்தான் இருந்த்து. காரணம் இஸ்லாம் மனிதர்களை ஆக்ரமிப்பதில்லை ஆட்கொள்கிறது. இஸ்லாமின்  நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் அவ்வப் போது  இது போன்ற டுரமான மிருக வெறித் தாக்குதல்கள் ஏற்பட்ட்துண்டு. அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இப்போதைய நிலையை விட மோசமாக கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இனி எதிர் காலமே இல்லை என்று எதிரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாம் சாமப்லில் இருந்து உயிர் பெற்று எழும்  பீனிக்ஸ் பறவையை போல -  அல்ல -   நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்திலிருந்து மீண்ட தீர்க்கதரிசி இபுறாகீமைப் போல பல முறை புத்துணர்வோடு  எழுந்திருக்கிறது.     

13 ம் நூற்றாண்டில் மங்கோலியப் பழங்குடியினரான தாதாரியர்கள் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை போல திடுமெனப் புகுந்து விவரிக்க முடியாத நாசத்தை விளைவித்தனர். சமர்கண்டு முதல் பக்தாது வரை வாழ்ந்த முஸ்லிம் உலகம் அந்த வெறி பிடித்த கூட்ட்த்தின் சண்டித்தனத்திலும் அமலியிலும் சிக்கி சின்னா பின்னமாகியிருந்த்து. த்தாரியர்களைப் பற்றி முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருந்த அச்சம் எத்தகையது என்பதை ஒரு அரபுப் பழமொழி படம் பிடிக்கிறது. அரபுகள் சொல்வார்களாம் : இதா கீல லக்க இன்னத் த்தர இன்ஹஸமூ பலா துசத்திக்
தாதாரியர் தோற்று விட்டார்கள் எனறால் நம்பக் கூடாது

ஒரு தாதாரியப் பெண் தங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனைப் பார்த்து விட்டால் அங்கேயே நில்: என்று எச்சரிப்பாள். அவன் அங்கேயே நின்று விடுவான். அவள் வீட்டுக்குள் சென்று வாளை எடுத்து வந்து அவன் தலையை சீவுவாள் என்று தாதாரியரின் ஆதிக்கத்தையும் அதை கண்டு எதையும் செய்ய்ய முடியாதிருந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையையும் வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள்.  ஆனால் மிகச் சீக்கிரத்தில் முஸ்லிம்கள் இந்தச் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த மீட்சிக்கு இஸ்லாம் காரணமாக இருந்த்து,

எத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. அவர்கள் தோற்றுத்  துவண்டு போன களங்களில்  இஸ்லாம் வெற்றியடைந்திருக்கிறது, நவீன் ஆயுதங்கள் தொழில் நுட்பம் மிகுந்த ஊடகங்கள் என்ற எத்தைய எதிர்ப்புச் சூழ்நிலையும் மீறி தனது மக்களை காப்பற்றுகிற வலிவும் சாதுர்யமும் சாமார்த்தியமும் இஸ்லாத்திற்கு இருக்கிறது.  அதற்கான அடையாளங்கள் இப்போது தென்பட்த்துவங்கி விட்டன. இஸ்லாமையும் முஸ்லிம்களை எதிர்த்து முழங்குவதயே வாடிக்கையக கொண்டிருந்தவர்கள் ஒருவனை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப உதைப்பது அவன் பக்கம் இருக்கிற நியாயம் என்ன என்று கேட்க வேண்டிய இயற்கையின் ஒரு கட்டாய்த் திருப்பத்திற்கு ஆளாகி இந்தப் பக்கமிருக்கிற நியாயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி இஸ்லாம் பேசும். அது தனது எதிரிகளை வெல்லும். 

ஆக்கிரமிப்புச் சக்திகளை தனது சத்திய வெளிச்சத்தால் இஸ்லாம் எதிர் கொள்கிறது என்பதே இஸ்லாமிய வெற்றியின் பின்னணியில் இருக்கிற ரக்சியம்.  

தோல்வியின் வாசலிலும் விரக்தியின் விளிம்பிலும் நிற்கிற முஸ்லிம்கள் இஸ்லாமின் வழிகாட்டும் இந்த சத்திய விரலைப் பிடித்துக் கொண்டால் வரலாற்றின் சதிப்பள்ளங்களை அவர்கள் தாண்டிக் குதித்து விட முடியும். இரண்டாம் உலக யுத்த கால கட்ட்த்தில் துருக்கிய மக்கள் செய்த தவறை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது.

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு துருக்கியில் ஐரோப்பிய மோகம் கொண்ட ஒரு தலை முறை உருவானது. அவர்கள் இஸ்லாம் என்ற கீரீட்த்தை தங்கள் தலை மீது ஏற்றப் பட்டிருக்கிற சுமையாக கருதினார்கள். தங்கது அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று நினைத்தார்கள். உலகப் புகழ் பெற்ற துருக்கிக் தொப்பியை உதறினார்கள். தாடியை மழித்துக் கொண்டார்கள். பெண்கள் புர்கா அணியக் கூடாது என்றார்கள். ஐரோப்பியர்களைப் போல ஹட் தொப்பி வைத்துக் கொண்டார்கள். சுருட்டு பிடித்தார்கள். கோட் அணிந்து கொண்டார்கள். இப்படிச் செய்து விட்டால் ஐரோப்பியர்களாகி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்த்து. துருக்கிய மக்கள் தங்களது பழைய பெறுமையையும் இழந்தார்கள். புதிய முன்னேற்றத்தையும் இழந்தார்கள். இன்றும் ஐரோப்பாவின் நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இப்போது அங்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இஸ்லாமை தங்களது வாழ்க்க்கைகுள் மீட்டு வந்தாக வேண்டும் என்ற முனைப் போடு அங்குள்ள இளம் த்லைமுறை இஸ்லாம் வேண்டும் என்று கேட்டு போராடிவருகிறது. 

சிறிது காலம் ஐரோப்பிய உலகு செய்த மூளைச் சலைவைக்கு இடம் கொடுத்த்தால் துரூக்கியின் வளர்ச்சி இன்னும் ஒரு 50 ஆண்டு காலத்திற்கு பின்னுக்குச் சென்று விட்ட்து.

இத்தைகைய விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் நெருக்கடிகளில் இருந்து மீளவும் முஸ்லிம்களுக் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. தங்களது சமயத்தை உறுதியாக பற்றிக் கொள்வதே அது!

இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமின் அடிப்படையான நீதி உணர்வுக்கு எதிராக தங்களது சுய உணர்ச்சிகளுக்கு சம்யச் சாயம் பூசிக் கொள்ளும் போலி புரட்சியாளர்களையும் தூய்மை வாதிகளையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறி விடக்கூடாது. அவர்களை தங்களது சமூகத்தின் எல்லா மட்ட்த்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். கட்டுச் சோற்றுக்குள் எலிகளையும் சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டு நீண்ட பயணம் போக முடியாது.

எல்லாருக்குமான நீதி எல்லோருக்குமான சட்டம் எல்லோருக்குமான கருணை என்ற தெய்வீக கோட்பாடே இஸ்லாமின் லட்சியம் என்ற சுத்தமான உணர்வு முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சாரார் புரிகிற அட்டூழியம் நீதி தவறும் துணிச்சலை அவர்களுக்கு தந்து விடக்கூடாது.

கொள்கையற்றவர்களும், மதமற்றவர்களும், வழிகாட்டிகளை தொலைத்தவர்களும் நட்த்திக் காட்டுகிற  கூத்தாட்ட்த்தில் மயங்கிவிடாமல், முஸ்லிம்கள்  தங்களது கிடைத்திருக்கிற உறுதியான சம்யக்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் போதுமானது.  மார்க்கம் அவர்க்களை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவந்து விடும்; மக்காவின் ஒட்டகம் மேய்க்கத் தெரியாத உமர்களை உலகச் ச்கரவர்த்திகளாக உயர்த்தியது போல.

அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்.  

No comments:

Post a Comment