Thursday, March 10, 2011

அவ்லியாக்களின்..

அ.அப்துல் அஜீஸ் பாகவி 

சிந்தனைச் சரம்


சமீப சில காலங்களாக இறை நேசாகள் எனும் சொல் தவிக்கப்பட வேண்டிய ஒரு சொல்லாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தாஹாக்களில் நடைபெறுகிற முற்றிலும் மாக்த்திற்கு அப்பாற்பட்ட சில செயல்பாடுகளை காரணமாக காட்டி இறைசோகளை பற்றிய ஒவ்வாமையை சமுதாயத்தில்  சிலா ஏற்படுத்தி வருகிறாகள். 
இறை நேசத்தை பெற வேண்டும் என்பது முஸ்லிம்களின் ஆதார உணர்வாகவும் அதற்காக முயற்சிப்பது அவாகளின் அடிப்படை செயல் திட்டமாகவும் இருக்க வேண்டும் என்ற சுழ்நிலையில் அதற்கு முன்னோடிகளாக திகழ்ந்த பெருமக்களை நிராகாப்பதோ மலினப்படுத்துவதோ ரியதையை குறைக்க முயற்சி செய்சவதோ மக்களை அவாகளது சத்திய இலட்சியத்திலிருந்து திசை திருப்புவதாகும்.

இறைநேசப் பெருந்தகை முஹையித்தின் அப்துல் காதி ஜீலானி அவாகள் குறித்து சிறப்பாக நினைவு கூறப்படுகிற இந்த கால கட்டத்தில் இறைநேசாகள் யார்? அந்த நிலையயை எப்படிப் பெறுவது? இறைநேசாகளை எந்தக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்பது பற்றி சமுதாயத்திற்கு பல விளக்கங்கள் தேவைபடுகின்றன.
 முஸ்லிம்களில் சிலர் இது விசயத்தை இஸ்லாமின் அடிப்படையில் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அல்லது இறைநேசர்களின் மீது தீவிர மரியாதை கொண்டவாகளாக காட்டிக் கொள்வதற்காக செய்கிற செயற்கையான தடபுடல்களால் மக்கள் அரங்குகளில் இந்தப்பிரச்சினை தவறான தளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. 
 இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு தெளிவானது.  வேறு எந்தச் சமயத்தின் இறையியல் கோட்பாடும் இந்த அளவு எளிதாகவும் தெளிந்ததாகவும் இல்லை. முஸ்லிமல்லாதாகள் கூட முஸ்லிம்களின் இறையியல் கோட்பாடுகளை மிகச் சுருக்கமாக மிகச் சிறப்பாக விளங்கி வைத்திருக்கிறாகள்.  இந்நிலையில் இறைநேசாகளின் தளகாத்தாகளாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிப்போர் உண்மையற்ற தகவல்களின் அடிப்படையில் இறைநேசாகளின் புகழையம் வரலாற்றையும் அதீத உணாச்சியோடு விவரிக்கையில் இந்த தெளிவான இறையியல் கோட்பாட்டையே சிக்கலானதாகவும் பூடகமானதாகவும் ஆக்கிவிடுகிறாகள்.

இது முஸ்லிம்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய ஒரு விசயம் .

பக்தி அல்லது மரியாதை என்ற பெயரால் தவறான கருத்துக்களுககு ஆட்படுவது  கையில் விளக்கை பிடித்துக் கொண்டே பள்ளத்தில் தடுமாறி விழுவதைப் போன்றதாகும்.. 

 “வலி என்ற சொல்லின் பன்மையே அவ்லியா என்பது. வலி என்ற வார்த்தைக்கு இறைவனை நேசிப்பவர், அல்லது இறைவனால் நேசிக்கப்படுபவர் என்ற கருத்தில் இறைநேசா என்று பொருள் கொள்ளப்படுகிறது. 

 இந்தப் பெயர் உண்மையான மரியாதைக்குரிய மனிதர்களை சிறப்பித்துச் சொல்லும் ஒரு பெயராகும். இது தவிர சட்டரீதியாக எந்த ஒரு அங்கிகாரத்தை தருவதறகும் அல்லது ரத்து செய்வதற்குமான அதிகாரம் பெற்ற ஒரு பொறுப்பின் பெயரல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  அதாவது வலி என்பவர்  ஒன்றை புதிதாக் ஹலாலாக்கவோ ஹரமாமாகவோ முடியாது.
இறைவனை அறிந்து அவனுக்கு தூய முறையில் வழிபடுவதை வழக்கமாக்கி கொண்டவரே இறைநேசர் என ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி  விளக்கமளிக்கிறா
الولي : العالم بالله والمواظب علي طاعته المخلص في عبادته -  فتح الباري -
(அல் ஆலிமு பில்லாஹி அல்முவாழிபு அலா தாஅதிஹி அல் முஹ்லிஸு பீ இபாததிஹி - பத்ஹுல் பா ஹதீஸ் எண் 6502)
ஒரு சாமாணிய மனிதர் இறைவனை பயந்து பணிந்து வாழ்வதில் அதீத அக்கறை எடுத்துக் கொண்டு உள்ளும் புறமும் சுத்தமானவராக வாழும் போது அவர் இறைநேசர் என்ற மரியதைக்கு உரியவராகிறார். அல்லாஹ்விற்கு நெருக்கமாகி விடுகிறார். 

பெருமானா(ஸல்) அவாகள் சொன்னார்கள்.:
அல்லாஹ் கூறினான் எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடண்ம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்ற கண்ணாக அவன் பற்றுகின்ற கையாக அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புகாரி 6502)  
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
கட்டாயக்கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகு மேலதிகமாக வணக்க வழிபாடுகளில் தொடாந்து ஈடுபட்டு வந்தால் அது இறைவனின் நெருக்கத்தை பெற்றுத் தருகிறது என்ற கருத்தை இந்நபிமொழி குறிப்பிடுகிறது.
இது ஒன்றும் புந்து கொள்ள முடியாத விசயம் அல்ல. முதலாளிக்கு விசுவாசமாகவும் அக்கறையாக சற்று அதிகப்படியாக உழைக்கிற ஊழியர் முதலாளிக்கு நெருக்கமாகிவிடுவதும், அவரது அந்த நெருக்கத்தின் விளைவாக மற்றவர்களுக்கு கிடைக்காத சில சலுகைகளையும் மாயாதையையும்  அவா பெறுவதும் எதார்த்தமே!
இது போலவே  இறைவனுக்குப் பணிந்து அவனிட்ட கட்டளைகளை முழுமனதோடு நிறைவேற்றி இதயச்சுத்தியோடு வாழ்பவாகள் இறைவனுக்கு நெருக்கமானவாகளாக இறைவனை நேசிப்பவாகளாக இறைவனால் நேசிக்கப்படுகிறவாகளாக ஆகிறார்கள். அப்போது  பல் புதிய சிறப்புக்களை அவர்கள் பெறுகிறார்கள்
இந்நபி மொழியை விளக்கிச்சொல்வதற்கு தத்துவப் பேரறிஞா ஜலாலுத்தீன் ரூமி பயன்படுத்தும் உவமை மிக அழகானது.  
இரும்புக் கொல்லாகள் இரும்பை நெருப்பில் போட்டு காய்ச்சுகிற போது நெருப்பில் தோயத் தோய இரும்பு நெருப்பு கட்டியாக மாறிவிடுகிறது. இரும்பு இரும்பாகவே இருக்கிறது. நெருப்பு நெருப்புகவே இருக்கிறது ஆனாலும் தன்னில் திழைத்துக்கிடக்கிற இரும்பை  நெருப்பு தன்னுடையதாக்கிக் கொள்வது போலவே அல்லாஹ் தன்னில் ஆவமும் அச்சமும் கொண்டு தோய்ந்து விடுகிற மனிதாகளுக்கு தனது நெருக்கத்தை வழங்குகிறான். அதன் பயனாக சில சந்தர்ப்பங்களில் ஆச்சாயமான செயல்ககள் அவர்களிடமிருந்து வெளிப்படலாம். 

நன்றாக கவனிக்க வேண்டும். இறை நேசர் எனபர் இறைவனின் நெருக்கத்தை பெற்றார் என்பது தான் பெரிதே தவிர அவர்  அற்தங்களை செய்யும் ஆற்றல் பெற்றாரா? என்பது முக்கியமல்ல.

ஸ்லாமிய அடிப்படையில் இறைநேசராவது  சித்தராவது போலவோ முனிவராவது போலவோ கிருத்தவத்தில் புனிதவராவது போலவோ அல்ல. குடும்பத்தை துறந்து வாழவ்வதோ காடு மவைகளில் கடும் தவம் புரிவதோ இஸலாம் குறிப்பிடும் இறை நேசத்திற்கு தேவையற்றவை. தூய எண்ணத்தோடு மார்க்கத்ததை பின்பற்றி வாழ்ந்து அல்ஹ்வே வாழ்வில் மிக முக்கியமானவன் என்ற உணர்வை கனவிலும் நினைவிலும் கைவரப் பெறுபவா எவரோ அவா இஸ்லாமிய பாவையில் இறைநேசராகிவிடுவார்.

இது ராஜ ரிஷிகளால் வழங்கப்படுகிற பட்டமும் அல்ல. பக்தர்களால் சூட்டப்படுகிற பட்டயமும் அல்ல. ஒரு மனிதா அவருக்குள்ளாக அவர் அனுபவிக்கிற் பக்குவமும் பரவசமும் ஆகும். எனவே இஸலாமிய இறை நேசா என்பவா உலகிற்கு அறிமுகப்படுதததப்படவோ அடையாளப்படுத்தப்படவோ வேண்டியது அவசியமில்லை.  
சில இறைநேசர்கள் காலத்தின் தேவை அறிந்து அவாகள் ஆற்றிய அரும்பணிகளின் விளைவாக அடையாளம் காண்பட்டாகள் என்பதே உண்மையாகும்.

இறைநேசர் என்பவர் இறைவனின் இரகசிய வட்டத்திற்குள் இருக்கிறார் என்பதே இஸ்லாமிய அறிஞாகளின் கருத்தாகும். ஒரு இறைநேசா தன்னை மறைத்துக் கொள்ளவே விரும்புகிறா.  

அது போல இறைநேசா என்பவா அற்புதங்களை செய்து காட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சில வேளைகளில் இறைவனின் நேசத்தை பெற்றவரே கூட தன்னிடம் இருக்கிற அற்புத ஆற்றல் பற்றி ஆறியாமல் இருக்கலாம். ஆப்படியே தொந்திருந்தால் கூட  மணப்பெண் வெட்கப்படுவது போல தனது தனிச்சிற்ப்புக்களை வெளிப்படுத்த அவா வெட்கப்படுகிறார்.

பெரும்பாலும் அற்புதங்கள் இறைநேசர்கிளிடமிருந்து தற்செயலாகவே வெளிப்பட்டுள்ளது.

நபி (இறைத்தூதர்) அல்லாத நல்ல மனிதாகளிடமிருந்து வெளிப்படுகிற அற்புதச்செயல்களுக்கு கராமத் என்று பெயா. இத்தகைய  கராமத் வெளிப்படுவது சாத்தியமே.அது சத்தியமே என்று நம்ப வேண்டியது நமது கடைமையாகும். அதே நேரத்தில் இறை நேசர்களை அற்புதச் செயல்களின் பிறப்பிடமாக கருதக்கூடாது.

மக்களிடம் அப்படி ஒரு கருத்து  பொதுவாக இருக்கிறது. ஒரு வலி இறைநேசரைப்பற்றி கேள்விப்பட்ட உடன் வர் என்ன அற்புதங்கள் செய்துள்ளார்?  என்று வினாத்தொடுப்பது பலருடைய முதல் வேலையாக Jருக்கிறது. இறைநேசர் என்பவா அற்புதங்களை செய்து காட்டும் வித்தைக்காரா அல்ல.
வலிமாகளை அடையாளம் காண்பதற்கு இந்த அனுகுமுறை சாயானதல்ல. அபுல் அப்பாஸில் முரஸி என்ற அறிஞா இறைநேசாகளை அடையாளங்கண்டு கொள்வதற்கு கூறிய அளவுகோள் மிகப்பொருத்தமானது.நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத்தகுந்தது. நம்மை பக்குவப்படுத்தக் கூடியதும் கூட. அவா கூறினா:
كن طالب الإستقامة لا طالب الكرامة
இறைசோகளிடம் இஸ்திகாமத் எனும் செம்மையை  தேடு! கராமத் எனும் அற்புதங்களை தேடாதே! (குன் தாலிபல் இஸதிகாமதி லா தாலிபல் கராமா)
மார்க்கம் வலியுறுத்துகிற நல்ல செயல்களை மிக கவனமாகவும் தொடாச்சியாகவும் செம்மையாகவும் செய்துவருவதன் மூலமே ஒருவா இறைவனின் சேநத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்கிற போது இறைநேசாகளை அந்த கண்ணோட்டத்தில் அனுகுவதுவது தான் சாயானது, இறைநேசாகளைப்பற்றிய மாயாதையை முழுக்க உள் வாங்கிக் கொள்ள உதவக்கூடியது.அந்த வழியில் நம்மையும் பக்குவப்படுத்தக் கூடியது.

ஒரு உதாரணம் சொன்னால் இதை புரிந்து கொள்வதும், இந்தக் கருத்தை மனதில் இருத்திக் கொள்வதும் எளிதாக அமையும்.

ஒருவர் ஒரு இறை நேசரிடம் பத்து ஆண்டுகளாக தொடாபு கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அந்தப் பெரியவரிடம் சென்று உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் என்று கூறினார்.  திடீரெனப்  புபபடக் காரணம் என்ன? என்று அந்தப் பொயவா கேட்டார்.

இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் எந்த அற்புதத்தையும் செய்து காட்டவில்லையே  அதனால் புறப்படுகிறேன் என்றார் அந்த மனிதா. பெரியவர், அவரை பக்கத்தில் அழைத்து சரி!. இந்த பத்து ஆண்டுகளில் ஒரு தடவையாவது பர்ளு தொழுகையை அதனுடைய நேரத்தில் நான் தொழாமல் இருந்திருக்கிறேனா? என்று கேட்டார். இல்லை என்றார் சீடர். ஒருதடவையாவது ஜமாத்தாக தொழாமல் தனியாக தொழுததை பாத்திருக்கிறாயா என்று கேட்டா. எப்போதுமே ஜமாத்துடன் தொழுபவராகத்தான் உங்களை கண்டிருக்கிறேன் என்றார் சீடர். ஒரு தடவையேனும் (தக்பீ தஹ்ரீமாவுடன்) முதலிலேயே  இமாமுடன் இணைந்து விடாமல் தாமதமாக வந்து இணைந்து தொழுது பாத்திருக்கிறாயா? என்று கேட்டார்.  அப்படிப்பாத்த்தில்லை என்றா சீடர் . முதல் சப் அணியைத் தவிர்த்து இரண்டாவது அணியில் தொழுது பாத்திரக்கிறீரா என்று கேட்டா பெரியவர்.அதற்கும் அவா இல்லை என்றார். அவருக்கு புரி வைத்துவிட்ட திருப்தியோடு அந்தப் பொயவர் கேட்டார். இதைவிட பெரிய அற்புதம் வேறு எது? ஏன்று கேட்டார்.

அப்போது தான் அந்த சீடருக்கு தன்னுடைய எண்ணவோட்டம் தவறானதென்று புரி வந்தது.

எந்த ஒரு நற்செயலையும் தவறாமல் தொடாநது கடைபிடித்து வரும் இஸ்திகாமத் எனும் செம்மைப் பண்புததான் இறைசேநாகளின் அணிகன் ஆகும். இந்த பண்பை வைத்துத்தன் நிறைநேசர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

சுப்யான் பின் அப்தில்லாஹ் அத்தகபீ என்ற நபித்தோழர்  பெருமானார்(ஸல்) அவர்களிடம் இறைவனின் தூதரே! நான் கவனமாக பற்றிக் கொள்ளத்தக்க ஒரு அறிவுரையை சொல்லுங்கள் என்று கேட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினாகள்.

عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ قُلْ رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ
எனது இறைவன் அல்லாஹ் என்று சொல் அதிலே நிலைத்து நில்!
(திர்மிதி :2334)    

அல்லாஹ்வும் இந்தப்பண்பையே வலியுறுத்துகிறான்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

ங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொல்லி அதிலேயே நிலைத்திருப்பவாகள் எதற்கும் அச்சப்பட மாட்டாகள். அவாகள் கவைலைப்படவும் மாட்டாகள்

மார்க்கத்தின் கடமைகளை செவ்வையாகச்  செய்வதே இறைநேசத்தை பெறுவதன் முதல் படி என்ற தத்துவத்தை இந்தத்திருவசனமும் பெருமானான் பொன்மொழியும் மிக அழுத்தமாக தெரிவிக்கின்றன. ஏந்த ஒரு இறைநேசரும் மாக்கத்தின் கடமைகளை முறையாக பேணி நடந்ததன் விளைவாகவே இறை நேசத்தை பெற்றார் என்பதை எப்போதும் கவனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தின் அடிப்படைகளுக்கு முரணான அல்லது புதிதாக விளக்கமளிக்கப்பட்ட எந்த செயலையும் செய்பவர் அவா எத்தைகைய அற்புத சக்தி உடையவராக பேசப்பட்டாலும் வரிடமிருந்து விலகிவிடுவதே நமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும்.

 நபிகள் நாயகம் (ஸல்) வர்களை விட பக்தி மிகுந்தவராகவோ  இறைவனிடத்தில் நெருக்கமானவராகவோ இன்னொருவரைக் காட்ட முடியாது. பெருமானா(ஸல்) அவாகளது வாழ்கையில் மர் முடிச்சுக்களோ, வெளிப்படையான அறிவுரைகளுக்கு எதிரான நடவடிக்கைகளோ  கிடையாது. எனவே எந்த ஒரு இறைநேசரையும் பெருமானாருடையவும் சஹாபாக்களுடையவும் முன்னுதாரணங்களை கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்.

இஸலாமிய சட்ட அமைப்பிற்கு ரீஅத் என்று பெயா. ந்த ரீஅத்தின் சட்ட வரையறைகளுக்கு மாற்றமான எந்தவொரு நடவடிக்கையை யார் செய்தாலும் அவர் இறைநேசராக இருப்பாரோ என்ற அச்சத்தில் அனுமதித்ததோ ஆதரித்தோ விடக்கூடாது.

இத்தகைய நபர்களை தடுக்க முயலவேண்டும்.  முடியாவிட்டால், உடனடியாக விர்த்துக்  கொள்ள வேண்டும்.

நமது சொர்க்க வாழ்கைக்கு பெருமானார் (ஸல்)அவாகள் நமக்கு கற்றுத்தந்த ஷரீஅத் ஒன்று மட்டுமே போதுமானது. அதற்கு மாற்றமாககவோ புதுமையாகவே விளக்கம் எதுவும் நமக்குத் தேவையில்லை.

ஷரீஅத்திற்கு மாற்றமான நடைமுறைகளை கொண்டவர்  தன்னை இறைசேர் என்று அடையாளப்படுத்தி அற்புதங்களை செய்து காட்டினால் நாம் விலகிக் கொள்ள வேண்டிய முதல் தஜ்ஜால் அவா தான் என்பதை புந்து கொள்ள வேண்டும்.

ரீகத் எனும் ஆன்மீக வழிமுறை என்பது ரீஅத்தை மிகவும் பேணுதலாக கடைபிடிப்பதற்குய ஒரு வழிமுறையே தவிர எந்த ஒரு விசயத்திலும் ஷரீஅத்திற்கு முரண்பட்டுச் செல்கிற ஒரு சலுகை வழியல்ல என்பதை உறதியாகவும் தெளிவாகவும் இறைநேசாகள் விண்டுரைத்துள்ளாகள்.

ஹிஜ்ரீ 415 ம் ஆண்டு பிறந்த அப்துல் காதி ஜீலானி (ரஹ்) அவாகள் தனது வாழ்வில் ஷரீஅத்தை போதித்து அதன செயல்படுத்தியதில் மிகப்பெரும் மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தார். ன்னாரது போதனைகளின் விளைவாக மிக அதிக எண்ணிக்கயிலான மக்கள் மார்க்கத்தை கடைபிடி த் தொழுகினார்கள். அதன் விளைவாகவே அவருக்கு முஹ்யித்தீன் மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்ற புகழ்ப் பெயர் வந்தது.  

ஈமானிய வாழ்வை பண்படுத்திக் கொள்வர்தற்காக அவர் கூறிய தத்துவங்களும் அவர் நடந்து காட்டிய வழிமுறைகளும் ஏராளமானவை.

இறைநேசர்களை பகைத்துக் கொள்பவரோடு அல்லாஹ் போரிடுகிறான் என்ற நபிமெபழிக்கு விளக்கம் கூறுகிற இபுனு ஹஜர் அல் அஸ்கலானி அவாகள் இந்த வாசகம் இறைநேசாகளை நேசபிப்வாகளை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்ற ருத்தை தருவதாக குறிப்பிடுகிறா.

இறைநேசர்களை  நேசித்து  நாமும்  கண்ணியம் பெறுவோம்

2 comments:

  1. mariyathaikuriya imaam abdul azia bakavi avarkalukku thangkal pani menmelum sirakka thuaa seykireen aameen

    ReplyDelete
  2. இது போன்ற விளக்கங்கள் நம் சமுதாயத்க்கு மிகவும் அவசியம்

    ReplyDelete